Kural

திருக்குறள் #589
குறள்
ஒற்றுஒற்று உணராமை ஆள்க; உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும்
குறள் விளக்கம்
ஒற்றர்களைப் பயன்படுத்தும்பொழுது ஓர் ஒற்றனை மற்றொரு ஒற்றன் ஆள்வானாக! அவ்வாறு மூன்று ஒற்றர்களைக் கையாள வேண்டும். அந்த மூன்று ஒற்றர்களுடைய சொற்களும் கருத்தால் ஒத்திருக்குமானால் அக்கருத்தையே உண்மையென்று தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும்.