குறள்
சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க; செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை
குறள் விளக்கம்
மறைந்தவை அறிந்து சொல்லிய ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பினை அரசன் பிறர் அறியச் செய்யாமலிருக்க வேண்டும். பிறரறியச் செய்வானேயானால் தன்மனதில் வைத்துக் காக்க வேண்டிய ரகசியத்தைத் தானே வெளிப்படுத்தினவனாவான்.