குற்றங்கடிதல்
குறள் # 431
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து
குறள் # 432
இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு
குறள் # 433
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்
குறள் # 434
குற்றமே காக்க பொருளாக; குற்றமே அற்றம் தரூஉம் பகை
குறள் # 435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தாறு போலக் கெடும்
குறள் # 436
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு?
குறள் # 437
செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும்
குறள் # 438
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று
குறள் # 439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை
குறள் # 440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில் ஏதிலார் நூல்

