குறள்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தாறு போலக் கெடும்
குறள் விளக்கம்
குற்றம் வருவதற்கு முன்பாகவே அக்குற்றம் வராமல் தன்னைக் காத்துக்கொள்ள முயலாத அரசனுடைய (தலைவனுடைய) வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் வைக்கப்பட்டுள்ள வைக்கோல் கூட்டம்போல அழிந்து விடும்.