Kural

திருக்குறள் #434
குறள்
குற்றமே காக்க பொருளாக; குற்றமே
அற்றம் தரூஉம் பகை
குறள் விளக்கம்
பிறவியின் நோக்கத்தை அழித்து அல்லது அரசனுக்கு முடிவை உண்டுபண்ணும் பகையைத் தருவது அறுவகைக் குற்றங்களே ஆகும். அக்குற்றங்களைத் தன்னிடம் தோன்றாதபடி கருத்துடன் கவனித்து தன்மனத்தைக் காப்பது தலையாய பண்பாகும்.