குறள்
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு?
குறள் விளக்கம்
முதலில் தனது குற்றத்தை உணர்ந்து, அதனை நன்கு நீக்கிய பிறகு, மற்றவர்களுடைய குற்றத்தைக் காணும் திறமையுடையவனானால் அரசனுக்கு ஏற்படுகின்ற குற்றம் என்ன இருக்கப்போகிறது? ஒரு குற்றமும் இருக்காது என்பது கருத்து.