கொல்லாமை
குறள் # 321
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும்
குறள் # 322
பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
குறள் # 323
ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன் பின்சாரப் பொய்யாமை நன்று
குறள் # 324
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி
குறள் # 325
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை
குறள் # 326
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணும் கூற்று
குறள் # 327
தன்உயிர் நீப்பினும் செய்யற்க, தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை
குறள் # 328
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை
குறள் # 329
கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து
குறள் # 330
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப, செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்

