Kural

திருக்குறள் #321
குறள்
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்
குறள் விளக்கம்
புண்ணியச் செயல் எதுவென்று கேட்டால் எந்த உயிரையும் கொலை செய்யாமையாகும். பிற உயிர்களைக் கொலை செய்தல், புண்ணியத்திற்கு எதிரான பாவச்செயல்கள் அனைத்தின் பயன்களையும் கொடுத்துவிடும்.