குறள்
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப, செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்
குறள் விளக்கம்
அருவருக்கத்தக்கத் தோற்றம் தரும் நோய் மிகுந்த உடலுடன், வறுமையுடன், தீய செயல்களைச் செய்து வாழ்ப்வரை இவர் முற்பிறப்பில் உயிர்களை அவை நின்ற உடம்புகளிலிருந்து நீக்கினவர் என்று வினையின் விளைவுகளை அறிந்தவர்கள் சொல்வார்கள்.