Kural

திருக்குறள் #328
குறள்
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை
குறள் விளக்கம்
இல்லறத்தில் உயிர்ப்பலி வேள்விகள் செய்வதால் புண்ணியமுண்டாகும். அப்புண்ணியப்பயனாகிய இன்ப வாழ்வு இடம், பொருள், கருவி, காலம் இவைகளால் பெரிதாக அமையுமாயினும் துறவு நெறியை மேற்கொண்டவரால் அத்தகைய உயிர்ப்பலிவேள்வியால் கிடைக்கும் பெரிய புலன் இன்ப வாழ்வு மிகமிகக் கீழான தன்மையுடையதாகக் கருதப்படும்.
குறள் விளக்கம் - ஒலி