குறள்

நிலையாமை
குறள் # 331
நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை
குறள் # 332
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்;
போக்கும் அதுவிளிந் தற்று
குறள் # 333
அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்
குறள் # 334
நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்
குறள் # 335
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்
குறள் # 336
நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு
குறள் # 337
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல
குறள் # 338
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு
குறள் # 339
உறங்கு வதுபோலும் சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
குறள் # 340
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு?