Kural

திருக்குறள் #323
குறள்
ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று
குறள் விளக்கம்
கொல்லாமை, ஒப்புயர்வற்ற நன்மையை அருளும் சிறப்புடையது. பொய் பேசாமலிருத்தல் எனும் அறம் கொல்லாமையாகிய அறத்திற்கு அடுத்தபடியாக நன்மையை அருளும் சிறப்புடையது ஆகும்.