குறள்
பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
குறள் விளக்கம்
அறம் முதலிய வாழ்வின் உறுதிப்பயன்களை அறிவிக்கும் நூல்களை அருளிய பெரியோர்கள், துறவு வாழ்வை மேற்கொள்பவர்களுக்காக வகுத்துத் தொகுத்துச் சொல்லிய அறங்கள் எல்லாவற்றிலும் முதன்முதலாகச் சிறப்பித்துச் சொல்லப்பட்ட அறமாக விளங்குவது எதுவென்றால், உணவைப் பசித்த உயிர்களுக்கு அன்புடன் வழங்கிப் பிறகு தானும் தன்னுயிரைப் பாதுகாக்க உண்டு பல வகையான உடல்களில் வாழும் உயிர்களைப் போற்றிப் பாதுகாத்து வணங்குவதாகும்.