பெரியாரைப் பிழையாமை
குறள் # 891
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை
குறள் # 892
பெரியாரைப் பேணாது ஒழுகின், பெரியாரான் பேரா இடும்பை தரும்
குறள் # 893
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு
குறள் # 894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்
குறள் # 895
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர்
குறள் # 896
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம், உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்
குறள் # 897
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின்
குறள் # 898
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து
குறள் # 899
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும்
குறள் # 900
இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின்

