Kural

திருக்குறள் #907
குறள்
பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின் நாணூடைப்
பெண்ணே பெருமை உடைத்து
குறள் விளக்கம்
(ஆண்மகனாகப் பிறந்து) பெண்ணின் ஏவலை ஏற்று அதன்படி நடப்பவனின் ஆண்தன்மையைக் காட்டிலும் நாணத்தைத் தன் இயல்பாக உடைய பெண்ணின் பெண்தன்மையே மேன்மை உடையதாகும்.