குறள்
உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்?
குறள் விளக்கம்
தமக்குப் பயன் உள்ளவிடத்து, நட்பு பூண்டு, அப்பயன் இல்லாவிடத்து, விலகிச் செல்லும், குணம் செயல்களில் நல்லாரோடு ஒப்புமை இல்லாத இழிந்தவரின் நட்பை பெறுவதால் உண்டாகும் பயன் யாது? இழப்பதால் வரும் கேடு யாது?(ஒன்றுமில்லை என்பது கருத்து).