கூடாநட்பு
குறள் # 821
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு
குறள் # 822
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும்
குறள் # 823
பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது
குறள் # 824
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும்
குறள் # 825
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று
குறள் # 826
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும்
குறள் # 827
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்
குறள் # 828
தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார் அழுதகண் நீரும் அனைத்து
குறள் # 829
மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லை பாற்று
குறள் # 830
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்

