தூது
குறள் # 681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம் பண்புடைமை தூதுஉரைப்பான் பண்பு
குறள் # 682
அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு இன்றி அமையாத மூன்று
குறள் # 683
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு
குறள் # 684
அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு
குறள் # 685
தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது
குறள் # 686
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது
குறள் # 687
கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து எண்ணி உரைப்பான் தலை
குறள் # 688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு
குறள் # 689
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வண்க ணவன்
குறள் # 690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது

