Kural

திருக்குறள் #688
குறள்
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு
குறள் விளக்கம்
பொருளுக்கும் போகத்திற்கும் அடிமையாகாத தூய்மையும் தனக்கு வேற்றரசனது அமைச்சரை துணையாக ஆக்கும் ஆற்றலும் துணிவுடையவனாக இருத்தலும் ஆகிய இம்மூன்றுடன் கூடிய வாய்மையும் தன்னுடைய அரசன் சொல்லிய வண்ணமே வேற்றரசனிடம் சொல்லும் தூதுவனின் இலக்கணமாகும்.