Kural

திருக்குறள் #681
குறள்
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம்
பண்புடைமை தூதுஉரைப்பான் பண்பு
குறள் விளக்கம்
தன் சுற்றத்தாரிடத்திலும் தன் வேந்தனிடத்திலும் அன்புடையவனாகவும், அமைச்சருக்கான தகுதி உடைய நற்குடியில் பிறத்தலும் அரசர் விரும்பக்கூடிய சிறந்த குணமுடையவனாகவும் இருக்க வேண்டியது தூது சென்று உரைப்பவனின் தகுதியாகும்.