குறள்
அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு
குறள் விளக்கம்
இயற்கையாக அமைந்த நுண்மையான அறிவும் பலரோடும் பலகாலம் கற்று ஆராயப்பட்ட நூல் அறிவும் கண்டவுடன் விரும்பத்தக்கதான வடிவமும் ஆகிய நன்மதிப்பைத் தரக்கூடிய இம்மூன்று தகுதிகளையும் அதிகமாக உடையவன் தூது புரிவதற்கு செல்ல வேண்டும்.