வினைசெயல்வகை
குறள் # 671
சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது
குறள் # 672
தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க தூங்காது செய்யும் வினை
குறள் # 673
ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே; ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல்
குறள் # 674
வினைபகை என்றுஇரண்டின் எச்சம் நினையும்கால் தீஎச்சம் போலத் தெறும்
குறள் # 675
பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்
குறள் # 676
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல்
குறள் # 677
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்
குறள் # 678
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று
குறள் # 679
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல்
குறள் # 680
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து

