Kural

திருக்குறள் #671
குறள்
சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
குறள் விளக்கம்
வினை செய்வதற்கு முன்பு நன்கு ஆலோசனை செய்வதின் எல்லை என்பது அச்செயலைச் செய்யத் துணிவைப் பெறுதலாகும். அவ்வாறு செய்யத்துணிந்த காரியத்தை செய்யாமல் காலம் தாழ்த்தி நிறுத்தி வைப்பது குற்றமாகும் அது தீமையைத்தரும்.