குறள்

வினைத்திட்பம்
குறள் # 661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
குறள் # 662
ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள்
குறள் # 663
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும்
குறள் # 664
சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம்
சொல்லிய வண்ணம் செயல்
குறள் # 665
வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறுஎய்தி உள்ளப் படும்
குறள் # 666
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
குறள் # 667
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சுஆணி அன்னார் உடைத்து
குறள் # 668
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்
குறள் # 669
துன்பம் உறவரினும் செய்க துணவுஆற்றி
இன்பம் பயக்கும் வினை
குறள் # 670
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு