Kural

திருக்குறள் #678
குறள்
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று
குறள் விளக்கம்
செய்கின்ற ஒரு செயலால் அச்செயலைப் போன்ற வேறொரு செயலையும் முடித்துக் கொள்வது என்பது, மனிதர்களிடம் பழக்கப்பட்ட யானையைக் கொண்டு காட்டில் திரியக் கூடிய வேறொரு புதிய யானையைப் பிடித்தலைப் போன்றது.