குறள்
பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்
குறள் விளக்கம்
செயல் செய்யும் முன்பு அதற்கான பொருள், அதைச் செய்வதற்கான கருவி அதைச் செய்யத்தகுந்த காலம், செய்ய வேண்டிய தொழில், தகுந்த இடம் ஆகிய இவ்வைந்தினையும் சந்தேகமில்லாமல் நன்கு ஆலோசித்து செயலைச் செய்ய வேண்டும்.