Kural

திருக்குறள் #673
குறள்
ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே; ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்
குறள் விளக்கம்
செயலைச் செய்யும் போது செய்ய முடிகின்ற இடத்தில் எல்லாம் செய்து முடிப்பது நன்மை தருவதாகும். அவ்வாறு செய்ய இயலாத விடத்து அச்செயலை சாம, பேத, தான மென்னும் மூன்றில் ஏதாவதொரு வெற்றிதரக்கூடிய உபாயத்தை எடுத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும்.