Kural

திருக்குறள் #575
குறள்
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்
குறள் விளக்கம்
ஒருவனது கண்களுக்கு அணிகலனாவது கண்ணோட்டமாகும். அவ்வணிகலன் இல்லையென்றால் அக்கண்கள் புண்ணாக அறிவுடையவரால் கருதப்படும்.