குறள்
பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்
குறள் விளக்கம்
யாவராலும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தை விரும்புபவர், விஷத்தைத் தன்னுடன் இருப்பவர் கொடுத்தாலும் கண்ணோட்டம் என்னும் பண்பைப் பாதுகாப்பதற்காக அருந்தி இருப்பர். அப்பண்பின் மேன்மையை உணர்த்துவர்.