Kural

திருக்குறள் #503
குறள்
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு
குறள் விளக்கம்
கற்பதற்கு அரிதான நூல்களைக் கற்று குற்றங்கள் இல்லாதவரிடத்திலும் நுண்மையாக ஆராய்ந்து பார்த்தால் அறியாமை இல்லாமலிருப்பது அரிதாகும்.