குறள்
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு
குறள் விளக்கம்
தலைவனின் ஆராய்ந்து தெளிதலானது, நற்பண்புமிக்க குடும்பத்தில் பிறந்தவனாய் குற்றங்களிலிருந்து விலகி, தான் குற்றம் புரிந்துவிடக்கூடாது என அஞ்சும் இயல்புடைய நாணமுடையவனிடத்தில்தான் இருக்க வேண்டும்.