குறள்
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
குறள் விளக்கம்
அறவே குற்றமற்றவர் உலகத்தில் கிடைக்க மாட்டார். எனவே குணங்களை ஆராய்ந்து குற்றங்களையும் ஆராய்ந்து அவைகளுள் மிகுதியாக எது உள்ளதோ அதனை ஆராய்ந்து மிகுதியானவற்றின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்.