காலம் அறிதல்
குறள் # 481
பகல்வெல்லும் கூகையைக் காக்கை; இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது
குறள் # 482
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு
குறள் # 483
அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின்?
குறள் # 484
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின்
குறள் # 485
காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்
குறள் # 486
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து
குறள் # 487
பொள்ளென ஆங்கே புறம்வேரார், காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
குறள் # 488
செறுநரைக் காணின் சுமக்க; இறுவரை காணின் கிழக்காம் தலை
குறள் # 489
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல்
குறள் # 490
கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்றுஅதன் குத்துஒக்க சீர்த்த இடத்து

