Kural

திருக்குறள் #487
குறள்
பொள்ளென ஆங்கே புறம்வேரார், காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
குறள் விளக்கம்
அறிவுடைய தலைவர் உடனே அவசரமாக வெளியே கோபத்தைக் காட்டமாட்டார். காலத்தை எதிர்பார்த்து உள்ளே கோபத்தை வைத்திருப்பார்.