Kural

திருக்குறள் #484
குறள்
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்
குறள் விளக்கம்
காலத்தை அறிந்து சரியான இடத்தில் செய்யப்படுமானால் பூமி முழுவதையும் ஆள நினைத்தாலும் கைகூடி வரும் (நடக்கும்).