Kural

திருக்குறள் #490
குறள்
கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து
குறள் விளக்கம்
செயல்புரிய, மீனுக்காகக் காத்திருக்கும் கொக்குபோல இருக்க வேண்டும். செயல்புரியத் தருணம் அமைந்தபோது கொக்கு மீனைக் குத்திவிடுவதுபோல தவறாது செயல்புரிந்துவிட வேண்டும்.