Kural

திருக்குறள் #481
குறள்
பகல்வெல்லும் கூகையைக் காக்கை; இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
குறள் விளக்கம்
காக்கையானது தன்னிலும் வலிமை மிக்கக் கோட்டானை அதன் வலிமை குன்றிய பகல் நேரத்தில் வென்றுவிடும். அதுபோல பகையை வெல்ல எண்ணுகின்ற அரசருக்கு அதற்குத் தகுந்த காலத்தை அறிதல் மிகமுக்கியமானது ஆகும்.