Kural

திருக்குறள் #415
குறள்
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்
குறள் விளக்கம்
அறிவும் ஒழுக்கமும் உடையவர்களுடைய வாயிலிருந்து வரும் அறியாமையை நீக்கும் தீதற்ற சொற்கள் வழுக்கும் தன்மையை உடைய சேற்று நிலத்தில் நடப்பவர்களுக்கு உதவுகின்ற ஊன்றுகோல் போன்றதாகும்.
குறள் விளக்கம் - ஒலி