Kural

திருக்குறள் #420
குறள்
செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும்வாழினும் என்?
குறள் விளக்கம்
காதுகளின் வாயிலாக நுகரப்படும் சுவைகளை அறியாமல் வாயிலுள்ள நாக்கினால் உண்ணப்படும் உணவின் சுவைகளை அறியும் அறிவினை உடைய மனிதர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் அவர்களுக்கும் உலகத்திற்கும் யாது பயன்?! (ஒருபயனும் இல்லை என்பது கருத்து.)
குறள் விளக்கம் - ஒலி