Kural

திருக்குறள் #414
குறள்
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை
குறள் விளக்கம்
ஒருவன் தனது உள்ளத்திற்கு உறுதியை அருளும் நூல்களை முறையாகக் கற்காதவனாக இருந்தாலும் அறிஞர்களின் சொற்களை நன்கு கேட்பானாக. அவ்வாறு கேட்டலானது ஒருவருக்கு உள்ளத் தளர்ச்சி ஏற்படும்பொழுது உறுதியை நிலைக்கச் செய்யும் துணையாக அமையும்.
குறள் விளக்கம் - ஒலி