Kural

திருக்குறள் #411
குறள்
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
குறள் விளக்கம்
ஒருவருக்குச் செல்வங்களுள் சிறப்புமிக்க செல்வமாவது காதின் வாயிலாக, நூல்களின் பொருட்களைக் கேட்பதால் கிடைக்கும் செல்வமாகும். அந்தச் செல்வமானது மற்ற செல்வங்களைக் காட்டிலும் உடலுக்குத் தலைபோன்று உயர்ந்ததாகும்.
குறள் விளக்கம் - ஒலி