குறள்
காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
குறள் விளக்கம்
எளிதில் பார்க்க, அணுகத்தக்கவனால், எவரிடத்தும் கடுமையான சொற்களைக் கூறாமலிருந்தானேயானால் அந்த அரசனுடைய நாட்டை உலக மக்கள் அல்லது பெரியோர்கள் அனைவரிடத்தும் உயர்வாகச் சிறப்பித்துக் கூறுவர்.