Kural

திருக்குறள் #390
குறள்
கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்
உடையான்ஆம் வேந்தர்க்கு ஒளி
குறள் விளக்கம்
தக்கார்க்கு வேண்டியவற்றை வழங்குதல், அனைவரிடத்தும் முகமலர்ச்சியுடன் இனிய சொற்களை அன்புடன் கூறுதல், சட்டப்படி ஆளுதல், மக்களைச் செவ்வனே போற்றிப் பாதுகாத்தல் ஆகிய இந்த நான்கினையும் உடையவன் எல்லா அரசர்களுக்கும் விளக்குப் போன்றவன்.