குறள்

ஊழ்
குறள் # 371
ஆகுஊழால் தோன்றும் அசைவின்மை; கைப்பொருள்
போகுஊழால் தோன்றும் மடி
குறள் # 372
பேதைப் படுக்கும் இழவுஊழ்; அறிவகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை
குறள் # 373
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்
குறள் # 374
இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு
குறள் # 375
நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு
குறள் # 376
பரியினும் ஆகாவாம் பால்அல்ல; உய்த்துச்
சொரியினும் போகா தம
குறள் # 377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது
குறள் # 378
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்
குறள் # 379
நன்றுஆம்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆம்கால்
அல்லற் படுவது எவன்?
குறள் # 380
ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்