குறள்
இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்துஇவ் வுலகு
குறள் விளக்கம்
இனிய சொற்களுடன் தக்கார்க்குத் தேவையானவற்றை மனமுவந்து வழங்கி மக்களைப் பாதுகாக்கும் ஆற்றலுடைய அரசனுக்கு இந்த உலக மக்கள் அனைவரும் தன்னைப் (அவனைப்) புகழ்வதோடு தான் (அவன்) நினைக்குமனைத்தும் நிகழும்.