குறள்
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு
குறள் விளக்கம்
அரசிற்குப் பொருள் மேலும் மேலும் வருவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிந்து செயல்பட்டு உண்டாக்கலும் அப்படி வந்த பொருள்களை ஓரிடத்தில் சேர்த்து வைத்தலும் சேர்த்து வைத்த பொருள்களைப் பிறர் கொண்டுபோகாவண்ணம் பாதுகாத்தலும் பாதுகாத்துள்ள பொருட்களை அறம், பொருள், இன்பம் இவைகள் பொருட்டுச் செலவு செய்தலும் செய்ய வல்லவனே அரசன் ஆவான்.