குறள்
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு
குறள் விளக்கம்
தனது செயலைக் கண்டித்து அறிவுரை கூறும் அறிஞர்களது சொற்களைத் தாங்கமுடியாமல் கேட்கின்ற சொற்களாக இருந்தாலும் அச்சொற்களின் பயனைச் சிந்தித்துப்பார்த்துப் பொறுத்துக் கொள்கின்ற நற்பண்புடைய வேந்தனது குடையின்கீழே (அரசாட்சியில்) உலகம் (மக்கள்) என்றும் கட்டுப்பட்டிருக்கும்.