குறள்
படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
குறள் விளக்கம்
படைகள், மக்கள் நிலப்பரப்பு, அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட துணைவர்கள், நண்பர்கள் (நட்புடைய அரசர்கள்), தேவையான பாதுகாப்பு அமைப்புகள் (என) ஆறு உறுப்புகள் (அங்கங்கள்) உடையவன் அரசர்களுள் சிங்கம் போன்றவன். (முழுமையான சிறப்புக்குரியவன். அனைவரும் அறவழியில் வாழும்வண்ணம் ஆளும் ஆற்றல் மிக்கவன்).