துறவு
குறள் # 341
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்
குறள் # 342
வேண்டின்உண் டாகத் துறக்க; துறந்தபின் ஈண்டுஇயற் பால பல
குறள் # 343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை; விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு
குறள் # 344
இயல்பாகும் நோன்பிற்குஒன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து
குறள் # 345
மற்றும் தொடர்ப்பாடு எவங்கொல் பிறப்புஅறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை
குறள் # 346
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்
குறள் # 347
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு
குறள் # 348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்
குறள் # 349
பற்றற்ற கண்ணே பிறப்புஅறுக்கும்; மற்று நிலையாமை காணப் படும்
குறள் # 350
பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு

