Kural

திருக்குறள் #346
குறள்
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்
குறள் விளக்கம்
(உடலை உள்ளத்தை) நான் (என்றும்), என்னுடையது (என்றும்) கருதுகின்ற தவறான ஆழ்ந்த எண்ணத்தை (தக்க ஆசிரியரின் துணைகொண்டு பெற்ற மெய்யறிவுப் பயிற்சியினால்) அழித்தவன், விண்ணுலகில் வாழும் தேவர்களுக்கும் (கிடைத்தற்கரிய) மேலான வீட்டுலகம் எனப்படும் முக்தியின்பத்தை (இம்மண்ணுலகில் இவ்வுடலில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையிலேயே) உணர்ந்து உய்வடைவான்.